Monday 6th of May 2024 09:03:10 AM GMT

LANGUAGE - TAMIL
-
கிழக்கு மாகாணத்தில் உள்ள எழுத்தாளர்களினால் எழுதப்பட்ட ஏழு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு!

கிழக்கு மாகாணத்தில் உள்ள எழுத்தாளர்களினால் எழுதப்பட்ட ஏழு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு!


கிழக்கு மாகாணத்தில் உள்ள எழுத்தாளர்களினால் எழுதப்பட்ட ஏழு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் இந்த ஏழு நூல்களும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் உள்ள எழுத்தாளர்களின் ஆக்கங்களை வெளியிட முடியாத நிலையில் உள்ளவர்களுக்கு உதவும் வகையில் அவர்களினால் எழுதப்பட்ட நூல்களை அச்சிட்டு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வெளியிட்டு வைக்கின்றது.

இதன் அடிப்படையில் ஏழு எழுத்தாளர்களின் ஏழு நூல்களின் வெளியீட்டு நிகழ்வு இன்று மட்டக்களப்பு,களுதாவளை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் ச.நவநீதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் க.சிவநாதன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்பு விருந்தினராக மாகாண கல்வி திணைக்களத்தின் பிரதி கல்விப்பணிப்பாளர் பி.காத்தீபன் கலந்துகொண்டதுடன் கௌரவ அதிதிகளாக ஓய்வு நிலை கல்விப்பாளர்களான கே.பாஸ்கரன்,ஏ.மயில்வாகனம்,களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலய தலைவர் க.வேலாயுதபிள்ளை ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் கலாநிதி சின்னத்தம்பி சந்திரசேகரம் எழுதிய கிழக்கிலங்கை மரபு வழி தமிழ் இலக்கியங்கள்,வித்தகர் கு.சண்முகம் எழுதிய களுவன்கேணி வேடுவபரம்பரையினரின் வழக்காறுகள்,ஜனாபா சித்தி றபீக்கா பாயிஸ் எழுதிய சதுப்பு நிலக்கொக்கின் கால்கள்,கவிஞர் மருதூர் ஜமால்தீன் எழுதிய மனிதம் வாழும் கவிதை தொகுப்பு,அண்ணாவியார் மூ.அருளம்பலம் எழுதிய தமிழ் கூத்தியல்,கவிஞர் ஏரூர் கே.நௌஷாத் எழுதிய மொட்டுக்களின் மெட்டுக்கள்,அருளானந்தம் சுதர்சன் எழுதிய சிறுவர் கவிச்சோலை ஆகிய நூல்கள் இதன்போது வெளியிட்டு வைக்கப்பட்டன.

நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளினால் நூல்வெளியீடு செய்துவைக்கப்பட்டதை தொடர்ந்து தொடர்ந்து நூல் அறிமுக உரையினை பேராசிரியர் செ.யோகராஜா,கலாநிதி எஸ்.சிவரெட்னம்,கவிஞர் எம்.பி.அபுல் ஹசன் ஆகியோர் நிகழ்த்தினர்.

MORE IMAGES
ADD HERE: ARTILCE COMMENT
MORE IMAGES
ADD HERE: ARTILCE COMMENT


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE